2025 ஜூலை 07, திங்கட்கிழமை

'புதிய மாற்றத்துக்கு ரணிலின் ஆசிர்வாதம் கிடைக்கும்'

ஆர்.மகேஸ்வரி   / 2020 ஜனவரி 22 , பி.ப. 03:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் எதிர்பார்ப்பதைப் போன்று சஜித் பிரேமதாஸவின் பலமிக்க தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் தேர்தலை வெற்றி பெறுவதற்கு தேவையான குறுகிய, நீண்டகால வேலைத்திட்டங்கள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்​ளதெனத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, 24 வருடங்கள் கட்சியின் தலைமைத்துவம் வகித்த ரணில் விக்கிரமசிங்கவின் ஆசிர்வாதத்துடன் இந்த பயணத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான சக்தியை சஜித் பிரேமதாசவுக்கு வழங்கி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஒத்துழைப்பு வழங்குவாரென எதிர்பார்க்கின்றோம் என்றார்.

இன்று (22) எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கட்சியை முன்​னோக்கிக் கொண்டு செல்வதற்கு தலைமைத்துவம் ஒன்று தேவையென்பதே எமது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் எதிர்ப்பார்ப்பு அதன்மூலம் கூறவில்லை அடுத்த தேர்தலுக்காக மாத்திரம் தலைமைத்துவத்தில் மாற்றம் வேண்டும் என நாம் சிந்திக்கவில்லை என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .