2025 ஜூலை 05, சனிக்கிழமை

புதிய வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று

Editorial   / 2019 ஜனவரி 08 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

2019ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்றம் இன்று பகல் 1 மணிக்கு கூடவுள்ளது.

குறித்த நாடாளுமன்ற கூட்டத்துக்கான ஒழுங்குப் பத்திரம் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று இடம்பெற்றிருந்ததுடன், இன்றிலிருந்து எதிர்வரும் 4 நாள்களுக்கு நாடாளுமன்ற கூட்டத் தீர்மானித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம கொறடா அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவின் இடத்துக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார இன்று நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .