2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புதிய வைத்திய கட்டளைச் சட்டத்தை உருவாக்க ஐவர் அடங்கிய குழு நியமிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய வைத்திய கட்டளைச் சட்டத்தை உருவாக்குவதற்காக, ஐவர் அடங்கிய குழுவொன்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வைத்திய சபையின் உப தலைவர், பேராசிரியர் நிலந்தி த சில்வாவின் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர்  அனில் ஜாசிங்க, பாலித பெர்ணான்டோ, பேராசிரியர் நரேந்திர த சில்வா, பேராசிரியர் பாலித அபேகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக வைத்திய கட்டளைச் சட்டத்தை உருவாக்குவதற்காக, ஆராய்ந்து புதிய யோசனைகள், அபிப்ராயங்களை முன்வைக்குமாறும் குறித்த குழு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், பொதுமக்கள் தமது கருத்துகளை குழுத் தலைவர், இலங்கை வைத்திய சபை, இல 31. நொரிஸ் கெனல் வீதி, கொழும்பு 10 என்ற முகவரிக்கு அனுப்புமாறும், இந்த குழுவின் செயலாளராக வைத்தியர் சீ. எல். கே அத்தபத்து செயற்படுவாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .