Editorial / 2021 மே 03 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் அவசரப்படுகிறது எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுபபினர் ஹர்சன ராஜகருணா, அவசரமாக இதனை விவாதத்தக்கு எடுக்க வேண்டாமென நாம் அரசாங்கத்திடம் கடுமையாக வலியுறுத்தினோம், எனினும், ஏன் இந்த அவசரமென தெரியவில்லை என்றார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
நாட்டுக்குத் தேவையானதும் பல முரண்பாடுகளைக் கொண்டுள்ளதுமான, இச் சட்டமூலமானது அவரச அவசரமாக ஏன் விவாதத்துக்கு எடுக்கப்படுகின்றது என தெரியாதுள்ளதாகத் தெரிவித்த அவர், தொடர்பான விவாதத்தை ஏன் ஒரே நாளில் நிறுத்த வேண்டுமென்றும் கேள்வி எழுப்பினார்.
செவ்வாய் (04) புதன் கிழமைகளில் மாத்திரம் சபையமர்வுகள் இடம்பெறுமெனவும், வியாழன் மற்றும் வௌ்ளிக்கிழமை இடம்பெறாது எனவு கூறப்பட்டதுடன், கொரோனா பரவல் அச்சத்தின் காரணமாகவே, அவ்விரு நாள்களும் தவிர்க்கப்பட்ட என அறிவிக்கப்பட்டது. அப்படியாயின், இவ்விரு நாள்களிலும் கொரோனா பரவாது என்பதற்கு உத்தரவாதம் என்ன? என்றும் வினவினார்.
கொரோனா தொற்றால், இந்தியாவின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவிலிருந்து விமானங்கள் இலங்கைக்கு இப்போதும் வந்துசெல்கின்றன. நாடு குறித்து சிந்திப்பார்களாயின் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருபவர்களுக்கு தடைவிதிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago