2025 ஜூலை 16, புதன்கிழமை

புதுடில்லிக்குப் பயணமானார் இராதாகிருஷ்ணன்

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, புதுடெல்லியில், நாளை மறுதினம் (04) நடைபெறவுள்ள கல்வி மற்றும் திறன் பற்றிய ஆசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவரும், கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன், இன்று (02) பிற்பகல், புதுடெல்லி நோக்கிப் பயணமானார்.

இந்த மாநாட்டில், இலங்கையின் கல்விக் கொள்கை தொடர்பாக விசேட உரையொன்றை, அவர் நிகழ்த்தவுள்ளார். குறித்த மாநாட்டில், ஆசிய நாடுகளைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ளதுடன், இதன்போது, ஆசிய நாடுகளின் கல்விக் கொள்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்படவுள்ளது.

ஆசிய நாடுகளின் கல்வித்தரத்தை உயர்த்துவதுற்கும் ஒவ்வொரு நாட்டிலும் இருக்கின்ற சிறந்த கல்வித் திட்டத்தை அனைத்து ஆசிய நாடுகளிலும் எவ்வாறு நடைமுறைபடுத்துவது தொடர்பாகவும், இதன்போது விரிவாக ஆராயப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X