Editorial / 2020 டிசெம்பர் 14 , மு.ப. 02:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்டத்தில், தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் பெண்ணொருவர், தான் பெற்ற சிசுவை மண்ணில் புதைத்துவிட்டதாகப் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், திடீரென மயக்கமடைந்த நிலையில், நேற்று (13) மாலை மீட்கப்பட்டு, கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையொன்றைப் பிரசவித்து உள்ளமைக்கான ஆதாரங்கள் இருப்பதாக, பொலிஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
வைத்தியசாலைக்குச் சென்ற பொலிஸார், அப்பெண்ணிடம், மேற்கொண்ட விசாரணையில், தனக்குக் குழந்தை பிறந்ததாகவும் அக்குழந்தையை மண்ணுக்குள் புதைத்துவிட்டதாகவும் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பிரமனந்தனாற்றில் புதைத்துவிட்டதாகத் தெரிவித்த அப்பெண்இ சிறிது நேரத்தின் பின்னர்இ உழவனூர் எனக் கூறியுள்ளார். அவர்இ மாறி மாறித் தகவல்களை வழங்கிவருவதால்இ குழந்தை புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டுபிடிப்பதில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார்இ சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தனர்.
44 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026