Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரன் பிரியங்கர ஜயசிங்ஹ, ஜூட் சமந்த, முஸப்பிர் முஹம்மது
புத்தளம் மாவட்டத்தில், மூன்று பிரதேச செயலகங்களை ஊடறுத்து, நேற்று (01) மாலை வீசிய கடுங்காற்றால், 250க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ள அதேவேளை, பொதுச் சொத்துகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளனவென, புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவித்துள்ளது. ஆனமடு, மஹகும்புக்கடவல, பள்ளம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே, இவ்வாறு பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர்.
குறித்த பகுதிகளில், நேற்று மாலை 5 மணியளவில், அதிக மழையுடன் கடுங்காற்று வீசியதெனவும், இதனால் பாரிய மரங்கள் பல முறிந்து விழுந்துள்ளனவெனவும், புத்தளம் மாவட்ட செயலாளர் என்.எச்.எம்.சித்ரானந்த தெரிவித்தார்.
மின்கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்தமையால், அப்பகுதி மக்களுக்கான மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதனைச் சீர்செய்யும் நடவடிக்கையில் மின்சார சபையினர் ஈடுபட்டுள்ளனர் என, அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆண்டிகம பகுதியில் இரண்டு பாடசாலைக் கட்டடங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்தமையால், பாடசாலைக் கட்டடங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனவெனவும், இதனால், குறித்த பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று (02) பாதிக்கப்பட்டனவென, புத்தளம் மாவட்ட செயலாளர் குறிப்பிட்டார்.
இந்நிலைமை குறித்துக் கருத்துத் தெரிவித்த அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, சொத்து சேத விவரங்களை மதிப்பீடு செய்து, விரைவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10,000 ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago