2025 ஜூலை 05, சனிக்கிழமை

புத்தளத்தில் பூரண ஹர்த்தால்

Editorial   / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன், எம்.எஸ்.முஸப்பிர்   

புத்தளம்- அருவக்காடு பகுதியில், கொழும்பு குப்பைகளைக் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளத்தில் இன்று (15) பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. புத்தளம் நகரின் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இன, மத, மொழி பேதங்கள் கடந்து  சர்வமத சம்மேளனத்தின் கீழ், பௌத்த மத்திய நிலையம், கிறிஸ்தவ சபை, இந்து மகாசபை, புத்தளம் மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா, புத்தளம் பெரிய பள்ளி மற்றும் க்ளீன் புத்தளம் அமைப்பு என்பன புத்தளத்தில் கூட்டாக தொடர்ந்து மூன்று தினங்களை கறுப்பு தினங்களாக அனுஷ்டிக்க அழைப்பு விடுத்திருந்தன.

இதன் இரண்டாவது நாளான  நேற்று (14)புத்தளம் நகரிலும் அதனை அண்மித்த கிராமங்களிலும் வதியும் முஸ்லிம்கள் நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .