Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
ரஸீன் ரஸ்மின் / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 02:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் - மன்னார் வீதியுடனான போக்குவரத்துக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர்.என்.கே.அலஹகோன் நேற்று (06) தெரிவித்தார்.
நாட்டில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக, கலாஓயா பெருக்கெடுத்துள்ளதால் புத்தளம் -எலுவன்குளம் பாலத்துக்கு மேலாக இரண்டு அடி உயரத்தில் வெள்ள நீர் பாய்ந்து செல்வதாகவும் அவர் ௯றினார்.
இதனால் புத்தளம் - மன்னார் வீதி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து போக்குவரத்துக்களும் புத்தளம் எலுவன்குளம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், புத்தளம் - மன்னார் பாதையூடாக பயணிப்போர் மாற்று வழியை பயன்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை காலி மாவட்டத்தில் நேற்று முன்தினத்திலிருந்து (6) பெய்து வரும் கடும் மழைக் காரணமாக, மாபலகம- எஹலகந்த வீதியின் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டதால்,போக்குவரத்துக்கு தடையேற்பட்டுள்ளது.
இவ்வாறு மண்சரிவுக்குள்ளான பகுதிகளை நேற்று காலை பிரதேசவாசிகள் சிரமதானம் மூலம் துப்புரவு செய்தமைக் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
18 minute ago
54 minute ago
59 minute ago