2025 ஓகஸ்ட் 10, ஞாயிற்றுக்கிழமை

புத்தாண்டு பரிசாக பெட்ரோல் விலை குறைப்பு

Editorial   / 2021 டிசெம்பர் 30 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாளை (01) புத்தாண்டாடு பிறக்கவிருக்கின்றது. இந்நிலையில் பெற்றோலின் விலையை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது இலங்கையில் அல்ல என்பது மட்டுமே உண்மையாகும்.

புத்தாண்டு பரிசாக ஜார்கண்ட் மாநிலத்தில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது என இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டும் பெட்ரோல் விலை லீட்டருக்கு 25ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஜார்கண்டில் தற்போது ஒரு லீட்டர் பெட்ரோல் 98 ரூபாய் 48 பைசாவாக இருந்து வருகிறது. எனவே, இந்த விலை குறைப்புக்கு பிறகு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், லீட்டருக்கு 73 ரூபாய் 48 பைசாவிற்கு விற்கப்படும். வரும் ஜனவரி 26ஆம் திகதி முதல் இந்த அறிவிப்பு அமுலுக்கு வரும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X