Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2025 ஜூலை 21 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூச்சிகள் நிறைந்த உணவை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு உணவக உரிமையாளருக்கு மாளிகாகந்தை நீதவான் லோச்சனா அபேவிக்ரம வீரசிங்க ரூ.75,000 அபராதம் விதித்தார்.
மேலும், முறைப்பாட்டாளருக்கு இழப்பீடாக உணவக உரிமையாளர் ரூ.60,000 வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொள்ளுப்பிட்டி பொது சுகாதார பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, கொள்ளுப்பிட்டி சந்திக்கு அருகில் அமைந்துள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளரே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பொதுமக்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து கொள்ளுப்பிட்டி சந்திப்பில் உள்ள பல உணவகங்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அந்த உணவகம் பொது சுகாதார விதிமுறைகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதாகவும் பொது சுகாதார ஆய்வாளர் இந்திக பிடவெல நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
1 hours ago