Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2023 டிசெம்பர் 01 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெங்களுரூ, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள 15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்மநபர் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து பாடசாலை நிர்வாகத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து விரைந்து வந்த பொலிஸார், பாடசாலைகளில் இருந்து மாணவ, மாணவியரை வெளியேற்றினர். மேலும், பாடசாலைகளில் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பதை கண்டுபிடித்தனர்.
அதேவேளை, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட பாடசாலைகளில் ஒன்று மாநில துணை முதல் மந்திரி டிகே சிவக்குமாரின் வீட்டிற்கு எதிரே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிகுண்டு மிரட்டலால் பெங்களூருவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago