2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பெண் கைதிகளும் போ​ராட்டத்தில் இணைவு

Editorial   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் இன்று அதிகாலை தொடக்கம் ஆண் கைதிகள் முன்னெடுத்து வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெண் கைதிகளும் இணைந்துக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1200 ​கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் குறித்த சிறையில், 400 கைதிகள்  சிறைச்சாலையின் கூரை மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது 150 பெண் கைதிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துள்ளனர்.

சிறைச்சாலையின் பல்​வேறு நடவடிக்கைகளுக்கு பொலிஸ் விசேட படையணியை ஈடுபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கைதிகளின் இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அங்குணகொலபெலஸ்ஸ பகுதியைச் சூழவுள்ள சிறைச்சாலைகளின் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்ததுடன், கொழும்பிலிருந்து சிறைச்சாலை பொலிஸ் அதிகாரிகள் 40 பேர் அங்குணகொலபெலஸ்ஸ பகுதக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .