2025 மே 05, திங்கட்கிழமை

பெண் தொழிலதிபரை கடத்தியவர் கைது

Editorial   / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெண் தொழிலதிபர் ஒருவரை பலவந்தமாக கடத்திச் சென்று வீட்டுக்குள் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணம், தங்கம், கார் மற்றும் 3 இலட்சத்திற்கும் அதிகமான பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம், தலாவ, குமார எலிய பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அநுராதபுரம், மாத்தளை சந்தி, குருந்தன்குளம் என்ற முகவரியை வசிப்பிடமாகக் கொண்டு  48 வயதுடைய பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

கணவரிடமிருந்து சட்டரீதியாகப் பிரிந்த பண்டாரவளையில் வியாபாரம் செய்த முறைப்பாட்டாளரான இப்பெண்,  அனுராதபுரம் குருந்தன்குளம், சந்தி,  மிஹிந்தலை ஆகிய பகுதிகளில் மளிகைக் கடை,  உணவகம், அறை வாடகைக்கு விடுதல் போன்றவற்றை நடத்தி வருகின்றார். 

சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர், உணவகத்திற்கு வந்த நபர் ஒருவர், வேலைவாய்ப்பு கேட்டுள்ளார். அவரே  வர்த்தகரான அந்தப்  பெண்ணைக் கடத்திச் சென்று, கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி கொள்ளையடித்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X