Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஜூலை 27 , மு.ப. 10:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட திருமணசேவை தரகரை எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதமன்ற நீதவான் வெள்ளிக்கிழமை(25) உத்தரவிட்டார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் திருமண தரகர், பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி திருமணம் முடித்துவைத்து அதற்கான தரகு பணத்தை பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அண்மையில் திருமணம்முடித்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் பெண் தனிமையில் இருந்து வந்துள்ளார். இந் நிலையில் வீட்டின் வாசல் கதவை திறந்து சட்டவிரோதமாக உட் சென்று வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டு சென்றுள்ளார்.
திருமண தரகரின் செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்த நிலையில் குறித்த திருமண தரகர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) பகலில் பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்கட்டதையடுத்து அவர் அலறியடித்துக் கொண்டு ஓடி வீட்டை விட்டு வெளியேறி அயலவர் வீட்டிற்குள் சென்றுவிட்டார்.
இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய திருமண தரகரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (25) ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago