2025 மே 12, திங்கட்கிழமை

பெருமளவு சிறார்களுக்கு தீவிர மந்த போசணை

Simrith   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதி தீவிர மந்த போஷணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அதிகளவில் காணப்படும் மாவட்டமாக கம்பஹா மாவட்டம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் கம்பஹா மாவட்டத்தில் இவ்வாறு பாதிக்கப்பட்ட 1439 சிறுவர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 320 சிறுவர்கள் மந்த போசணையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் அதிகமானோர் கொழும்பின் வடக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

அத்துடன் மந்த போசணையால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பிரதேச சுகாதார பிரிவு காரியாலயம் வழங்கும் நிவாரண திட்டங்களுக்கு பெற்றோர்கள் அழைத்து வருவதில்லை எனவும் போக்குவரத்து செலவீனங்களே இதற்கு காரணம் எனவும் கம்பஹா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து போக்குவரத்து செலவீனங்களை வழங்க செஞ்சிலுவை சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சுகாதார சேவை பணிப்பாளர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X