2025 ஜூலை 05, சனிக்கிழமை

பெரும் அபாயத்தை எதிர்கொண்டு வரும் குடாஓயா மக்கள்

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பிரதேசத்தில், தனியாருக்குச் சொந்தமான நிலப்பரப்பொன்றில் பாரியளவிலான கருங்கல் ஒன்று முறையாக அகற்றப்படாதுள்ளமையால், அதற்கு அருகில் வசிக்கும் பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையால் வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தோடு, இப்பகுதியில் மண் வெட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குறித்த இடத்தின் உரிமையாளர், அங்கு அபாய நிலையில் காணப்படும் இப்பாரியளவிலான கருங்கல்லை அகற்றும் பணிகளை மேற்கொள்ளவில்லையென்றும் தெரிவிக்கின்றனர்.

சில வருடங்களுக்கு முன்னர் அதே இடத்தில் கற்குவாரியொன்று நடாத்தி செல்லப்பட்டதாகவும், அதனால் தொடர்ந்து பல்வேறு பாதிப்புகளுக்குள்ளாகி வந்த நிலையில், பிரேதச மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து முறைப்பாடொன்றை பதிவு செய்தமையை அடுத்து, குறித்த கற்குவாரியை மூடுவதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் அதே இடத்தை வியாபாரியொருவர் வாங்கி, மண் வெட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதனால் குறித்த பகுதியில் காணப்படும் பாரியளவிலான கருங்கல் ஒன்று முறையாக இன்னமும் அகற்றப்படாது காணப்பட்டு வருவதால், தமது பிரதேசத்தை சுற்றி  அபாய நிலையொன்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக குறித்த நில உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்ட போதும், அது வேறு வழிகளில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .