2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’பெரும்பான்மை ஜனநாயகமாகாது’

Editorial   / 2018 நவம்பர் 30 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும்பான்மை என்பது, ஒருபோதும் ஜனநாயகமாகாது என்றும் ​அந்தப் பெரும்பான்மையானது, சிறுபான்மையைப் பாரபட்சமின்றி நடத்துவதன் ஊடாகவே, உண்மையான ஜனநாயகம் உருவாகுமென்றும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

வாக்களர்கள் தினத்தையொட்டி, தேசியத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் காலி மாவட்ட அலுவலகத்தினால் நடத்தப்பட்ட கேலிச்சித்திரம் மற்றும் சித்திரப் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களை வழங்கும் நிகழ்வு, காலி மாவட்டச் செயலகத்தில், நேற்று (29) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போ​தே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், யாழ்ப்பாணத்தில் உள்ளவர்களில் பெரும்பான்மையானோர் தமிழில் பேசுவதானது, சிங்களம் பேசுபவர்களுக்கு பாரபட்சமாக இருக்கக் கூடாதென்றும் அதேபோன்று, ஹம்பாந்தோட்டையில், பெரும்பான்மையானோர் சிங்களம் பேசுவதால், அங்கு, தமிழ் பேசுபவர்களுக்கு பாரபட்சம் இருக்கக் கூடாதென்றும் கூறினார்.

எவ்வாறாயினும், அனைவரும் தேர்தலுக்காகக் கைகளை உயர்த்தி இருக்கும் போது தான், அனைத்துத் தரப்பினரும் ஒன்றாக இணைய முடியுமென்றும், தேசப்பிரிய கூறினார்.

இதேவேளை, எதிர்வரும் தேர்தல்களின் போது, வாக்கெடுப்பை இலத்திரனியல் முறையில் நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் வளர்ச்சியடைந்த நாடுகளைப் போன்று, இலங்கையிலும், இலத்திரனியல் முறையிலான வாக்கெடுப்பு நிலையங்களைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், எதிர்வரும் 2019ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடத்தினரும் ஜனவரி 31ஆம் திகதியை, வன்முறைகளை எதிர்க்கும் நாளெனப் பிரகடனப்படுத்தி, அனைத்துப் பாடசாலைகளிலும் அதை அனுஷ்டிக்கச்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்றும், ​ தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .