2025 ஓகஸ்ட் 01, வெள்ளிக்கிழமை

பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவு

J.A. George   / 2022 மார்ச் 09 , பி.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி  இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (9) விசாரணைக்கு வந்தது.

அப்போது பேரறிவாளன் தரப்பில், கடந்த 30 ஆண்டு காலமாக பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறார். இதுவரை மூன்று முறை பரோலில் வெளியே வந்துள்ள அவர், சிறை நடத்தை விதிமுறைகளை முறையாகக் கடைபிடித்து உள்ளார். அவர்மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே அவருக்கு பிணை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது மத்திய அரசு தரப்பில், ஏற்கெனவே அரசுத் தரப்பில் பேரறிவாளனுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி அவருக்கு பிணை வழங்க கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .