2025 டிசெம்பர் 09, செவ்வாய்க்கிழமை

பேரிடர் மரணங்கள் உயர்ந்தன (முழு விபரமும் இணைப்பு)

Editorial   / 2025 டிசெம்பர் 08 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் சமீபத்திய நாட்களில் ஏற்பட்ட மிக மோசமான வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 635  ஆக உயர்ந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) திங்கட்கிழமை (08) அன்று தெரிவித்துள்ளது. அத்துடன், 192 பேர் காணாமல் போயுள்ளனர்.

மீட்பு மற்றும் தேடுதல் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த அனர்த்தங்களால் முழுமையாக  5,325 வீடுகளும், பகுதியளவில் 81,163 வீடுகளும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் 690 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதில், 22,218 குடும்பங்களைச் சேர்ந்த 69,861 பேர் உள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X