2026 மே 02, சனிக்கிழமை

பேருவளை ரயில் நிலையத்துக்குப் பூட்டு

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 15 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேருவளை ரயில் நிலையம் இன்றிலிருந்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதென, ரயில்நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர தெரிவித்தார்.

ரயில் நிலைய பணியாளர் ஒருவர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதால், பயணிகளின் நலன் கருதி ரயில் நிலையத்தை மூட தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் ரயில் நிலைய அதிபர்கள் இருவர் உள்ளிட்ட ரயில் நிலைய அலுவலக சபையினர் 6 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

நாளை(16) குறித்த ரயில் நிலையம் கிருமி தொற்று நீக்கப்படவுள்ளதென தெரிவித்த அவர், கூடிய விரைவில் ரயில் நிலையத்தை தற்காலிக அலுவலக சபையினரைப் பயன்படுத்தி திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் பேருவளை ரயில் நிலையத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள ரயில் பயணிகளுக்காக, ஹெட்டிமுல்ல,மக்கொன ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .