2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பேலியகொட மீன் சந்தையை நாளை திறக்கத் தீர்மானம்

Editorial   / 2020 ஏப்ரல் 24 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொட மீன் சந்தை கட்டடத்தை மொத்த விற்பனை நடவடிக்கைக்காக நாளையிலிருந்து மீண்டும் திறப்பதற்கு, பேலியகொட மீன் வர்த்தகச் சங்கம் தீர்மானித்துள்ளது.


குறித்த மீன் சந்தையிலிருந்து மீன் கொள்வனவு செய்த பிலியந்தலையைச் சேர்ந்த வியாபாரி ஒருவர்,கொரோனா தொற்றுக்கு உள்ளானதால், பேலியகொட மீன் சந்தை கட்டடத்தை மூடுவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.


இதற்கமைய, 22ஆம் திகதியிலிருந்து 3 நாள்களுக்கு இந்த சந்தைக் கட்டடம் மூடப்பட்டது.
இந்நிலையில் இங்கு பணிபுரிந்த 529 பணியாளர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர்களுள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது உறுதியானது.


அதற்கமையவே, குறித்த மீன் சந்தையை மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X