2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

பொகவந்தலாவ வைத்தியசாலைக்குப் பூட்டு

Nirosh   / 2021 பெப்ரவரி 01 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆ.ரமேஸ்)

பொகவந்தலாவை வைத்தியசாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து,  வைத்தியசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட பிராந்திய சுகாதார உதவிப் பணிப்பாளர் வைத்தியர் இமேஸ் பிரதாப் சிங்க தெரிவித்தார்.

மேலும், பொகவந்தலாவை  வைத்தியசாலையில்  ஆண்கள்  தங்கியிருந்து  சிகிச்சை பெறும் விடுதியில் நோயாளர்கள் அனைவருக்கும் ஆண்டிஜன்  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நோயாளர்கள் வீடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குத் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் பல நோயாளர்கள் வைத்தியசாலையிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு வரும் வெளிநோயாளர்கள் அனைவரும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X