Editorial / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
. எம். கிருஸ்ணா
பொகவந்தலாவை பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மேலும் எட்டு பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் 55 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த 23 ஆம் திகதி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை 28 மாலை கிடைக்கப்பெற்றது. அதில், கொழும்பிலிருந்து வந்தவர்களுக்கும் வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்பவர்களுக்கும் என 08 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட்டவளை ஆடைத்தொழிற்சாலையின் பணி புரியும் இன்வெறி, போற்றி தோட்டங்களைச் சேர்ந்த இருவரும், ஏற்கெனவே தொற்றுக்குள்ளான வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் இன்ஜஸ்ரீ, (கிருமகொல) பீரட் ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த பெண்களின் தாய், சகோதரன், சகோதரி என மூவருக்கும், லெச்சுமித்தோட்டம் நடுப்பிரிவைச் சேர்ந்த இருவருக்கும், என்பீல்ட் தோட்டத்தில் ஒருவருமாக மொத்தம் எட்டுப் பேருக்கே தொற்று உறுதியானது
வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் ஒட்ரி, இன்வெரி ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களை சுகாதாரப் பாதுகாப்புடன் சுயதனிமை மத்திய
நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026