Simrith / 2025 ஜனவரி 13 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்து பக்தர்கள் பாரம்பரியமாக கடந்த ஆண்டுகளில் தை பொங்கல் பண்டிகையை சிவப்பு அரிசியில் பொங்கல் தயாரித்து கொண்டாடினாலும், இந்த ஆண்டு திணை அரிசி அல்லது நாட்டு அரிசியை பயன்படுத்தி கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய பாவனையாளர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவில் இருந்து அரிசியை இறக்குமதி செய்து ஜனவரி 1 ஆம் திகதி நாட்டு மக்கள் பால் பொங்கல் பொங்கி அனுபவிக்க வழிவகுத்த மறுமலர்ச்சி அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
"தற்போது மறுமலர்ச்சி அரசாங்கம் தைப் பொங்கல் பண்டிகையின் பாரம்பரியத்தை மாற்றி, திணை அல்லது நாட்டு அரிசியைப் பயன்படுத்தி பொங்கல் தயாரிப்பதை ஊக்குவித்துள்ளது," என்று அவர் கூறினார்.
மைக்குகளுக்கு முன்னால் அரசாங்கம் பெரும் வாக்குறுதிகளை அளிக்கிறது ஆனால் ஒன்றைக் கூட நிறைவேற்றத் தவறிவிட்டது என குற்றம் சாட்டியதுடன் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஜேபிபி கடுமையாக எதிர்க்கிறது எனவும் அவர் மேலும் கூறினார்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025