2026 ஏப்ரல் 26, ஞாயிற்றுக்கிழமை

’பொங்கிய பால் பாணியில் முடிந்தது’

Editorial   / 2020 டிசெம்பர் 31 , மு.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டை, இந்நாட்டின் 69 இலட்சம் மக்கள் பால் பொங்கி வரவேற்றிருந்தனர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க, வருட இறுதியில், பாணியைப் பொங்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில்,

  
'நாட்டின் பொருளாதாரமும் பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது.  புதிய ஜனாதிபதியின் ஆட்சிக்கு, ஒரு வருடம் நிறைவடைகிறது. ஆனாலும், ஆட்சியமைக்க முன்னின்ற மகா சங்கத்தினரே, இந்த அரசாங்கத்தை விமர்சிக்கும் நிலையை ஆட்சியாளர்கள் தோற்றுவித்துள்ளனர்' என்றார். 

1948க்குப் பின்னர், அதிக பொய்களைச் சொல்லி அமைக்கப்பட்ட ஆட்சி, தற்போதும் பெரும் பொய்களில் மாத்திரமே பயணத்தைத் தொடர்வதாக, எல்லே குணவங்ச தேரர் விமர்சித்துள்ளார். விளாடிமிர் புட்டீனை எதிர்பார்த்தவர்களுக்கு 'ஹிட்லரை' விடவும் மோசமான தலைவர் கிடைத்துள்ளார் என, அவரே கூறிவிட்டார் என்பதையும் ஞாபகப்படுத்தினார். 

 வெறுமனே மூட நம்பிக்கைகளால் முன்னெடுக்கப்படும் ஆட்சியே நாட்டில் நிலவுதாக, மற்றுமொரு தேரர் குற்றஞ்சுமத்தியுள்ளார் என்பதையும் நினைவூட்டிய அவர், அரசியல்வாதிகளுக்கு அப்பால், மதத்தலைவர்களே இவ்வாட்சியை நிந்திக்கின்றனர் என்றார். 

ஊழல் தடுப்பு தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருக்கின்ற மூன்றிலொரு பங்கினர், மோசடிக்காரர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், அவ்வறிக்கையில், மோசடியான அமைச்சர்களின் பெயர்விவரங்கள் உள்ளன என்றார். 

'ஆனால், அரசியல் பழிவாங்கல்கள் எனக் கூறிக்கொண்டு, மேற்படி அமைச்சர்களைக் காப்பாற்றும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன' என்றார்.

'அதேபோல் ,புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில், 31 அரச நிறுவனங்கள் 10 பில்லியன் ரூபாய் நட்டம் ஈட்டியுள்ளன  என்று தெரியவந்துள்ளது. மத்திய வங்கி மோசடியை மிஞ்சும் வகையில், தற்போதைய ஆட்சியில் சீனி மோசடி செய்யப்பட்டுள்ளது' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .