Thipaan / 2017 ஜூலை 13 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிராந்திய அபிவிருந்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துசெய்ய உத்தரவிடுமாறு கோரித் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, செப்டெம்பர் 7ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என, உயர்நீதிமன்றம், நேற்று (12) அறிவித்தது.
சட்டத்தரணியான மேஜர் அஜித் பிரசன்னவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த இந்த மனு, நீதியரசர்களான புவனேக அலுவிஹார, நளின் பெரேரா, விஜித் கே. மலல்கொட ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில், நேற்று (12) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல், பிறிதொரு திகதி வழங்குமாறு கோரியமைக்கு அமையவே, மேற்குறித்த திகதி அறிவிக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் அல்லாத சரத் பொன்சேகாவை, அந்தக் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக நியமித்தமை சட்டத்துக்கு முரணானதாகும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த நியமனமானது, அரசியலமைப்புக்கு முரணானது என்றும். எம்.பி பதவிக்கான நியமனத்தை இரத்துச்செய்யுமாறும் மனுவில் கோரப்பட்டிருந்தது.
சரத் பொன்சேகா எம்.பி, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் காசிம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஆகியோர், இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
33 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago