2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

பொரளையில் வீதி தாழிறக்கம் : சாரதிகளுக்கு அவசர அறிவிப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை பொலிஸ் பிரிவின் மொடல் ஃபார்ம் சந்திக்கு அருகிலிருந்து டி.எஸ். சேனநாயக்க சந்தி வரையான கொழும்பு செல்லும் வீதியில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் முடிந்தவரை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மொடல் ஃபார்ம் சந்தி வழியாக கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் மொடல் ஃபார்ம் சந்தியிலிருந்து பொரளை மயானம் சுற்றுவட்டத்தை நோக்கிச் சென்று பேஸ்லைன் வீதிக்குள் நுழையலாம். 

ராஜகிரியவிலிருந்து கொழும்புக்குள் நுழையும் வாகனங்கள் ஆயுர்வேத சுற்றுவட்டத்திலிருந்து கோட்டா வீதி வழியாக கொழும்புக்குள் நுழையலாம். 

கொழும்பிலிருந்து மொடல் ஃபார்ம் சந்தி வழியாக ஸ்ரீ ஜவர்தனபுர வீதியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் டி.எஸ். சேனநாயக்க சந்தியில் இடதுபுறம் திரும்பி, பொரளை சந்தி வழியாக கோட்டா வீதி ஊடாக ஸ்ரீ ஜவர்தனபுர வீதிக்குள் நுழையலாம். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X