Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
R.Maheshwary / 2021 மே 24 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்று பரவலால் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து, மூடப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்கள் சில இன்று திறக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, பேலியகொட மெனிங் சந்தை, புறக்கோட்டை மொத்த வர்த்தக நிலையங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பொருளாதார மத்திய நிலையங்களான தம்பு்ளை, நுவரெலியா, தம்புத்தேகம, கெப்பட்டிபொல, வேயாங்கொட, மீகொட மற்றும் எம்பிலிப்பிட்டிய ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களும் இன்றைய தினம் திறக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாளைய தினம் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், குறித்த வர்த்தக நிலையங்களுக்கு தேவையான மொத்த பொருள்களை விநியோகிப்பதற்காகவே, இந்த பொருளாதார மத்திய நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago