2025 ஜூலை 17, வியாழக்கிழமை

’பொருளாதாரச் செயலணி 37 துறைகளின் கீழ் செயற்படவுள்ளது’

Editorial   / 2020 ஏப்ரல் 23 , பி.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொருளாதாரப் புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் உருவாக்கப்பட்டுள்ள செயலணியானது, தனது பணிகளை நேற்று (23) ஆரம்பித்த நிலையில், 37 துறைகளின் கீழ் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அந்த வகையில், புதிய பாதையினூடாக, இலங்கைக்கே உரித்தான பொருளாதார வட்டத்தைத் தயாரித்து, அதனூடாக உற்பத்திப் பொருளாதாரத்துடன் இணைந்துப் பணியாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த செயலணி உருவாக்கப்பட்ட பின்னர், அதன் தலைவர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று கூடிய போதே, இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது, கொரோனா நிலைமைக்குப் பின்னரும் நாட்டிக் கட்டியெழுப்பல், வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட இலங்கை எதிர்நோக்கக்கூடிய பொருளாதார மற்றும் சமூகச் சவால்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X