2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட இருவர் கைது

Editorial   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 10:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர்கள் இருவர் மாத்தறை – திஹகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை வீதியில், கட்டுமானப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் இயந்திரங்களுடன் அனுமதிப்பித்திரமின்றி டிப்பர் வாகனமொன்று பயணஞ்செய்வதாகப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் நிமித்தம் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் இருவரையும் குறித்த டிப்பர் வாகனத்துடன் திஹகொட பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட வேளையில், பொலிஸாருக்கு 20ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக வழங்க முற்பட்டள்ளனர்.

அத்தோடு குறித்த இருவ​ரிடமிருந்தும் மேலதிகமாக 400 லீற்றர் டீசல் கேன்கள் இருபதும், எரிபொருள் நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் ஒன்றும் மற்றும் வெற்று கேன்கள் நாற்பதும் ​கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .