2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பொலிஸின் கழுத்தை நெரித்தவர் பலி

Freelancer   / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிரிந்திவெல பிரதேசத்தில் பெண்ணொருவரின் தங்க நகையை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் காவலில் உயிரிழந்ததை அடுத்து, இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 26ஆம் திகதி மாலை, பெண்ணொருவரின் தங்க நகை கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், 27 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையில், பெண்களின் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் பல சம்பவங்களில் அவர் ஈடுபட்டுள்ளமை தெரியவந்ததாகவும்  சந்தேக நபர் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், இச்சந்தேக நபருடன் தங்கச் சங்கிலி கொள்ளையில் ஈடுபட்ட மற்றுமொரு சந்தேக நபர் வதுருகம பிரதேசத்தில் இருப்பதால், அவரை அடையாளம் காட்டுவதற்காக கிரிந்திவெல பொலிஸ் அதிகாரிகள் இருவர் சந்தேக நபரை கைவிலங்கிட்டு மோட்டார் சைக்கிளில் குறித்த இடத்துக்குச் சென்றுள்ளனர்.

அதன்போது, பண்டாரநாயக்கபுர பகுதியில் வைத்து, பொலிஸ் உத்தியோகத்தரின் கழுத்தை நெரித்து சந்தேக நபர் தப்பிச் செல்ல முயற்சித்த போது, பொலிஸ் அதிகாரியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கால்வாயில் கவிழ்ந்தது விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவத்தை அடுத்து சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியர்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .