2025 மே 01, வியாழக்கிழமை

பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் கோரிக்கை

Freelancer   / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில், நீங்கள் யார் என்பதை பிழையின்றி அடையாளம் காண பொலிஸாருக்கு உதவுமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வீதிச் சோதனையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரி, சம்பந்தப்பட்ட நபர் யார் என்று அறியாமல் தகவல் கேட்கும் போது நியாயமான முறையில் உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, முடிந்தவரை பல பொலிஸ் பரிசோதகர்களும் வீதிச் சோதனைக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரியொருவர்,  நபரொருவரை சோதனையிடும் சந்தர்ப்பத்தில், ​​அவன் அல்லது அவள் யார் என்று தெரியாமலேயே  விசாரிக்கிறார் என்று குறிப்பிட்ட அவர், தாங்கள் யார் என்பது பற்றிய துல்லியமான தகவலை வழங்குவது பொதுமக்களின் கடமையாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .