2025 ஜூலை 05, சனிக்கிழமை

பொலிஸ் நிலையத்தில் கத்திகுத்து

Editorial   / 2019 பெப்ரவரி 12 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் வைத்து, கத்திகுத்துக்கு இலக்கான பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண், முறைப்பாடொன்றின் விசாரணைக்காக,  மற்றுமொரு நபருடன் இன்று (12) பொலிஸ் நிலையத்துக்கு வருகைத்தந்துள்ளார்.

இவர்கள் பொலிஸ் நிலையத்துக்கு வருகைத்தந்த போது, குறித்த பெண்ணுடன் பல வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்ததாக கூறப்படும் நபரொருவரும் அங்கு வருகைத்தந்துள்ளார். இவரே குறித்த பெண்ணை கத்தியால் குத்தியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.

கத்திக்குத்தை மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவரென பொலிஸார் தெரிவித்தனர்.

40 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .