2025 மே 06, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் மா உள்ளிட்ட மூவருக்கு நோட்டீஸ்

Editorial   / 2023 நவம்பர் 29 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரகசியப் பொலிஸாருக்கு எதிராக செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பாக பொலிஸ் மா அதிபர் மற்றும் மூன்று பேரை பெப்ரவரி 28ஆம் திகதி நேரில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

எரிசக்தி நிபுணரான பீ.ரலபனாவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு, உயர் நீதிமன்றத்தில், பரிசீலனைக்காக புதன்கிழமை (29)  அழைக்கப்பட்ட போதே உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

இந்த ரிட் மனுவை  எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாந்து ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.

எரிசக்தி நிபுணரான பீ.ரலபனாவ தாக்கல் செய்த இந்த மனுவில், சி.ஐ.டி பொலிஸ், கணினி குற்றப்பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தமக்கு எதிரான முறைப்பாடு தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்க மறுத்ததன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X