2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ்மா அதிபரிடம் 45 நிமிட விசாரணை

Editorial   / 2019 ஜனவரி 15 , மு.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

குரல் பரிசோதனை ஒன்றுக்காக, அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று (14) சென்றிருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், சுமார் 45 நிமிடங்களாக, குரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ ஆகியோரைக் கொலைசெய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஊழல் எதிர்ப்புப் பிரிவு என்ற அமைப்பின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்டிருந்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ​அடிப்படையிலேயே, பொலிஸ்மா அதிபரிடம், மாதிரிக் குரல் பதிவொன்று நேற்று பெறப்பட்டது. 

கொழும்பு - கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க, கடந்த 4ஆம் திகதியன்று, பொலிஸ்மா அதிபருக்குப் பிறப்பித்திருந்த உத்தரவுக்கமையவே, நேற்று (14), அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அவர் பிரசன்னமாகி இருந்தார்.  

நாமல் குமார என்பர், மேற்படி கொலைச் சதித்திட்டம் தொடர்பாக, அதனுடன் தொடர்படைய 24 இரகசியத் அலைபேசி உரையாடல் பதிவுகளை, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்கியிருந்தார். அந்தப் பதிவுகளில், பொலிஸ்மா அதிபரின் குரல் பதிவும் இருக்கிறதா என, அரச பகுப்பாய்வுத் திணைக்களம் ஆராய்ந்து வருகிறது.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .