2025 ஜூலை 14, திங்கட்கிழமை

’பொலிஸ்மா அதிபருக்கே ஆதரவளிப்பேன்’

Kamal   / 2018 ஒக்டோபர் 21 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மீதான குற்றச்சாட்டுக்களை ஏற்க மறுத்துரைத்த பிரதேச அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் பீலட் மார்ஷல் சரத் பொன்சேகா, தான் பொலிஸ்மா அதிபருக்கே ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பு -களனி பிரதேசத்தில் நேற்று (20) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ​மேலும் கருத்துரைத்த அவர், 

100 நல்ல திட்டங்​களை செய்தாலும் ஒரு தோல்வியுற்ற திட்டத்தை பற்றி மாத்திரமே பேசப்படும். என​வே, பொலிஸ் மா அதிபர் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது. 

பொலிஸ்மா அதிபரால் விடுக்கப்படடும் பணிப்புரைகளை மற்றைய பொலிஸ் அதிகாரிகளே நடைமுறைப்படுத்துகின்றனர். எனவே பொலிஸ்மா அதிபரை  நோக்க மாத்திரம் கை நீட்டுவதில் நீட்டுவது தவறாகும். காரணம் இதனால் கட்டளைகளை வழங்கும் மேலதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்படும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .