2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது

Freelancer   / 2022 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீசல், பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருட்கள் போதியளவு கையிருப்பில் இருப்பதாகத் தெரிவித்துள்ள இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெட்கோ), எரிபொருள் தட்டுப்பாடு குறித்த தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எதிர்கால பெற்றோலிய விநியோகத்துக்கான கொள்வனவு தற்போது நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் சந்தையில் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதுடன், உள்ளூர் சந்தைக்கு தேவையான அனைத்து எரிபொருட்களையும் உற்பத்தி செய்யும் திறனை நிலையம் கொண்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பெற்றோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்வதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்கள், சிலோன் பெற்றோலியம் சேமிப்பு முனையத்தின் கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் நெரிசலைக் குறைப்பதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்தவுள்ளதாக கூட்டுத்தாபனம் மேலும் தெரிவித்துள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .