2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

போதை மாத்திரை வியாபாரி கைது

Freelancer   / 2021 ஓகஸ்ட் 18 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன், ஏ.எல்.எம்.ஷினாஸ்

கல்முனையில் இருந்து மட்டக்களப்பு, கல்குடாவுக்கு 3 ஆயிரம் போதை மாத்திரைகளை மோட்டார் சைக்கிளில் மறைத்து எடுத்துச் சென்ற பிரதான போதை மாத்திரை வியாபாரியை இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து கைது செய்து ஒப்படைத்துள்ளனர் என்று கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை காகிதஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகலையடுத்து கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில்  இன்று  நண்பகல் 12.30 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினர் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதன்போது, விசேட அதிரடிப்படையினர் கல்முனை பகுதியில் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்ட போது 3 ஆயிரம் போதை மாத்திரைகளை மீட்டதுடன்,  குறித்த நபரைக் கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வருவதாகவும் 32 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

கொழும்பிலுள்ள முகவரிடமிருந்து நேரடியாக போதை மாத்திரைகளை இறக்குமதி செய்து மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் கடந்த 6 வருடங்களாக போதை மாத்திரை விற்பனை செய்துவருவது அதிரடிப்படையினரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரையும் மீட்கப்பட்ட போதை மாத்திரை, மோட்டர் சைக்கிள்  என்பவற்றை பொலிஸாரிடம் விசேட அதிரடிப்படையின் ஓப்படைத்ததையடுத்து இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .