2025 ஜூலை 07, திங்கட்கிழமை

போதைப் பொருள் ஒழிப்புக்காக சிங்கப்பூரின் நடவடிக்கைகளைப் பின்பற்ற இணக்கம்

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப் பொருள் ஒழிப்புக்காக சிங்கப்பூர் அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் அருங்கலைகளையும் தொழிநுட்பத்தையும் இலங்கை போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்தில் அறிமுகப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தமது இணக்கத்தைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு நல்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு அதிகாரிகளிடம் விடுத்த கோரிக்கைக்கு அவர்கள்  இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூருக்கான இரண்டு நாள்கள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் குடும்ப அபிவிருத்தி அமைச்சரும் தேசிய அ​பிவிருத்தி பிரதியமைச்சர் டெஸ்மன்ட் லி , அந்நாட்டு போதை ஒழிப்பு அதிகாரிகளுக்கிடையில் இன்று மென்டரியன் ஹோட்டலில் சந்திப்பொன்று இடம்பெற்றப் போதே போதை ஒழிப்பு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .