2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘போதைப்பொருட்களை ஒழிப்பதற்கு வேறுபாடின்றி ஒத்துழைக்கவும்’

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலிருந்து போதைப்பொருட்களை இல்லாதொழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய வேலைத்திட்டங்களுக்கு கட்சி வேறுபாடின்றி ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கை வாழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த நான்கு ஆண்டுகளில் மேற்கொண்ட வேலைத்திட்டங்கள் புதிய தோற்றத்துடன் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.  

‘போதையிலிருந்து விடுதலையான நாடு’ என்று பெயர் சூட்டப்பட்ட, வடக்கையும் தெற்கையும் இணைக்கும் முகமாக நவீன வசதிகளுடன் கூடிய புதிய ரயிலின் முதலாவது பயணத்தை, கோட்டை ரயில் நிலையத்திலிருந்து நேற்று (27) ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, அந்த ரயிலில் மருதானை வரையிலும் பயணித்தார். இதேவேளை, போதைப்பொருளால் ஏற்படும் தீய பின்விளைவுகள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் மக்களைத் தெளிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட இந்த ரயில், இரண்டு எஞ்சின்கள், குளிரூட்டப்பட்ட இரண்டு பெட்டிகள், 2ஆம் வகுப்பை கொண்ட இரண்டு பெட்டிகள் மற்றும் 3ஆம் வகுப்பை கொண்ட ஏழு பெட்டிகளையும் கொண்டதாகும்.  

இந்த நிகழ்வுடன் இணைந்தாக அறநெறிப் பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் ஒழிப்புத் தொடர்பாக தெளிவூட்டும் விசேட நிகழ்வொன்று, குருநாகல் ரயில் நிலையத்தில் நேற்று இடம்பெற்றது.  

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்ஜித்சிங் சந்து, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர். சமந்த கிதலவஆரச்சி ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .