Janu / 2026 பெப்ரவரி 12 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
போதைப்பொருள் பாவித்த நிலையில் தனியார் பேருந்துகளில் சேவையில் ஈடுபட்டிருந்த ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை, பிரதான பேருந்து நிலையத்திலிருந்து ஆரம்பமாகும் மற்றும் பிலியந்தலை நகரூடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் ஊழியர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே குறித்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சோதனை நடவடிக்கை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் விசேட நடமாடும் ஆய்வக வசதிகளைக் கொண்ட பேருந்தொன்றின் உதவியுடன் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டது. நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் 5 மணி நேரம் இந்தச் சோதனையை நடத்தினர்.
இதன்போது,
இந்தச் சோதனையின் போது மொத்தம் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் 170 பேர் பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 7 பேரின் உடலில் நச்சுத்தன்மை கொண்ட போதைப்பொருள் இருப்பது ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026