2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

போர்ட் சிட்டியில் தண்ணீர் விற்றவருக்கு ரூ. 500,000 அபராதம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்ட் சிட்டி கடற்கரை பகுதியில் உள்ள ஒரு கடை உரிமையாளருக்கு ரூ. 500,000 அபராதத்தை கொழும்பு மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி பத்திரண இன்று (20)விதித்தார். ரூ. 70க்கு விற்கப்படவிருந்த 500 மில்லி குடிநீர் போத்தலை ரூ. 200க்கு விற்பனை செய்தபோது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

2003 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவுகள் 20(5) மற்றும் 68 மற்றும் 2021 ஆம் ஆண்டு 20 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் பிரிவு 60(44) ஆகியவற்றின் கீழ் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்வதைத் தடுக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட போதிலும், அதிக விலைக்கு தண்ணீர் போத்தல்கள் விற்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளதால், அத்தகைய இடங்களை சோதனை செய்ய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X