2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

போலி செய்தி குறித்து எச்சரிக்கை

Simrith   / 2024 டிசெம்பர் 16 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஜனாதிபதி அன்பளிப்பு” என்ற தலைப்பில் அரசாங்க உதவித் திட்டத்தைப் பற்றிய ஒரு போலி செய்தி அதன் பாதுகாப்பற்ற மோசடி லிங்குடன், தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் எந்தவொரு தீர்மானமும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஊடக சந்திப்புகள் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சமூக ஊடக பயனர்கள் இதுபோன்ற தவறான தகவல்களைப் பகிர்வதை நிறுத்துமாறும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும்  அறிவுறுத்தப்படுகிறார்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .