2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

போலி நிர்வாணப் படங்களை உருவாக்கியவர் கைது

Simrith   / 2025 ஏப்ரல் 02 , பி.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு பெண்களின் போலி நிர்வாணப் படங்களை செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கியதற்காக அனுராதபுரத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படங்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு, நிகழ்நிலையில் பரவலாகப் பரப்பப்பட்டதால், குற்றவியல் விசாரணை நடத்தப்பட்டது.

சந்தேக நபர் 2025 மார்ச் 29 ஆம் திகதி அனுராதபுரம் பிரிவு குற்றப் பிரிவால் கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்குப் பிறகு, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஏப்ரல் 10, 2025 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .