2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

முச்சக்கரவண்டியை கடத்திய இருவர் சிக்கினர்

George   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை வைத்தியசாலைக்கு முன்பாக கடத்திச் செல்லப்பட்ட முச்சக்கரவண்டி மாளிகாவத்தை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வீதி போக்குவரத்து கடமையில் இருந்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில், குறித்த முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனை செய்த போது சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, சாரதியை தாக்கிவிட்டு முச்சக்கரவண்டி கடத்தப்பட்டிருந்தது.

இது தொடர்பில் முச்சக்கரவண்டி சாரதி, மோதரை மற்றும் மொரட்டுவை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்திருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .