2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மைத்திரி- ரணிலுக்கு அழைப்பாணை

Kanagaraj   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகிய இருவரையும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் உத்தரவிட்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவரதன, அவ்விருவருக்கும் நேற்றுத் திங்கட்கிழமை அழைப்பாணை பிறப்பித்தார்.

2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில், அப்போது பொது வேட்பாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனவினதும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினதும் போலிக் கையெழுத்துகளைக் கொண்ட ஆவணத்தைத் தயாரித்து, அவற்றைக் காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில், தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகிய இருவரையும் முறைப்பாட்டாளர் சார்பில் சாட்சியாளராக பெயர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளர் தரப்பில் இவ்விரு சாட்சியாளருக்கும் மேலதிகமா இன்னும் 15 பேருக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கை மார்ச் 20-ஆம் திகதி முதல், தினந்தோறும் விசாரணை நடத்த நீதிபதி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .