2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

Menaka Mookandi   / 2016 நவம்பர் 20 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நிலைமையின் கீழ், எதிர்வரம் சில வருடங்களில், மின்சாரத்துக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது

ஒவ்வொரு வருடமும், மின்சாரத்துக்கான கேள்வி, 6 சதவீதத்தால் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இருப்பினும், எவ்வித மின்வெட்டும் இன்றி, மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று, மின்சக்தி மற்றும் புதிப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் அபிவிருத்தித் தலைவர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

“நாட்டின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, புதிய மின்னுற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அத்துடன், தற்போது இயங்கிவரும் மின்னுற்பத்தி நிலையங்களின் செயற்றிறனை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மின்னுற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்க, காலதாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் தொடர்பில், ​இலங்கை மின்சார சபையிடம், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, விளக்கம் கோரியுள்ளது” என, அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .