2025 மே 21, புதன்கிழமை

முன்னாள் புலிகள் நால்வர் விடுவிப்பு

Kogilavani   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாதுகாப்பு பிரிவினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர், அவர்களுடைய உறவினர்களிடம் நேற்று வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளனர். வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்தே அவர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

ஒருவருட புனர்வாழ்வுக்கு பின்னர் அந்த நால்வரும் விடுவிக்கப்பட்டதுடன் கணினி பயிற்சிகளை நிறைவு செய்தோருக்கு சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இந்த புனர்வாழ்வு முகாமில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் 50 பேர் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .