2025 மே 22, வியாழக்கிழமை

முன்னாள் பதிவாளருக்கு சிறை

Thipaan   / 2015 டிசெம்பர் 15 , பி.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தின் முன்னாள் பதிவாளருக்கு, அம்பாறை மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி சுமுது பிரேமச்சந்திர, 5 வருடக் கடூழியச் சிறைத்தண்டனை விதித்து நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

நம்பிக்கையை மீறி, அம்பாறை மாவட்ட நீதிமன்றத்துக்கு உரித்துடைய 2 இலட்சம் ரூபாயைத் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்தினார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டார்.

அவருக்கு 6 இலட்சம் ரூபாய் தண்டம்விதித்த நீதிபதி, அத்தண்டப்பணத்தைச் செலுத்தத் தவறின், இன்னுமிரண்டு வருடசிறைத்தண்டனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .